- நிலை
- அன்னை வேளாங்கண்ணி கல்லூரி
- Karungal
- தேசிய அளவிலான கருத்தரங்கு
- தெலியாவட்டம்
- முதல்வர்
- டாக்டர்
- ஜே. ஜான்சன்
- தேசிய அளவில்
- தின மலர்
கருங்கல், பிப்.17 : தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உயிர்தொழில்நுட்பவியல் துறை சார்பில் பயோடெக்னாலஜி இன் சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் என்ற தலைப்பில் 4-வது தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கினை கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. ஜாண்சன் துவக்கவுரையாற்றி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியரும், தாவர உயிர் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநருமான ஜாண்சன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் சுரேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கருத்தரங்கிற்கு பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் துணை முதல்வர் பிருந்தா பரிசுகளை வழங்கினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மரணவ மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.
The post அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் appeared first on Dinakaran.
