- ஒட்டன்சத்திரம்
- ரெட்டியார்சத்திரம்
- பிரபாகர்
- ராஜ்குமார்
- திருச்சி
- Tarapuram
- மூலச்சத்திரம்
- ஒட்டன்சத்திரம்…
ரெட்டியார்சத்திரம், பிப். 16: திருச்சியை சேர்ந்தவர்கள் பிரபாகர் (23), ராஜ்குமார் (21). இருவரும் தாராபுரத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை இருவரும் தாராபுரத்தில் இருந்து திருச்சிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். ஒட்டன்சத்திரம் அருகே மூலச்சத்திரம் பகுதியில் வந்த திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், அதே சாலையில் முன்னால் சென்ற தூத்துக்குடியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதியது. இதில் பிரபாகர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார் படுகாயமடைந்தார். தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் ஸ்டேஷன் எஸ்ஐ லியோனி ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபாகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஒட்டன்சத்திரம் அருகே கண்டெய்னர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.
