×

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

வாலாஜாபாத்,பிப்.16: வாலாஜாபாத் ராஜ வீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி (60). இவர், மரம் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் உதவியாளராக ஊத்துக்காடு கிராமம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (70) இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பழனி மற்றும் வரதன் இருவரும் பைக்கில் சென்று வாலாஜாபாத்-தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் சாலை ஓர உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்றபோது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த அரசு பேருந்து இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட வரதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும், பழனி பலத்த காயங்களுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதனின் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பேருந்து மோதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Palani ,Raja Veedi ,Varadhan ,Uthukadu village ,Ambedkar Nagar ,Palani… ,Dinakaran ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...