×

நிர்வாக நியமனங்களில் நீதிபதி எப்படி?: ஜெகதீப் தன்கர் கேள்வி

டெல்லி: நிர்வாக நியமனங்களில் தலைமை நீதிபதி எவ்வாறு செயல்பட முடியும்? என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசினார். ஒரு ஜனநாயக நாட்டில் தலைமை நீதிபதி எப்படி சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க முடியும்?. முந்தைய அரசு ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த விதியை உருவாக்கியது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தற்போது மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது, இது நிச்சயமாக ஜனநாயகத்துடன் ஒத்துப் போகவில்லை என தெரிவித்தார்.

The post நிர்வாக நியமனங்களில் நீதிபதி எப்படி?: ஜெகதீப் தன்கர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Jagdeep Dhankar ,Delhi ,Vice President ,Bhopal, Madhya Pradesh.… ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...