- ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா
- சீனா
- ஹார்பின்
- ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்
- தின மலர்
ஹார்பின்: ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள் நிறைவு நாள் விழா நேற்று உற்சாகத்துடன் நடைபெற்றது. சீனாவின் ஹார்பின் நகரில் ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளின் கடைசி நாளான நேற்று நடந்த கர்லிங் எனப்படும் போட்டியில் ஆண்கள் பிரிவில் பிலிப்பைன்ஸ் அணி, தென் கொரியாவை 5-3 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக தங்கம் வென்றது. ஐஸ் ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் கஜகஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஜப்பான் அணியும் வென்று தங்கம் பெற்றன.
இப்போட்டிகளின் முடிவில், சீனா, 32 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. தென் கொரியா 16 தங்கம், ஜப்பான் 10 தங்கம் வென்று 2 மற்றும் 3ம் இடத்தை பிடித்தன. இப்போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. போட்டிகளின் முடிவை தொடர்ந்து நிறைவு நாள் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அடுத்த ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள், வரும் 2029ம் ஆண்டு சவுதி அரேபியாவின் டிரோஜனா நகரில் நடைபெற உள்ளன.
The post ஆசிய குளிர்கால விளையாட்டு நிறைவு நாள் விழாவில் உற்சாக கொண்டாட்டம்: 32 தங்கத்துடன் முதலிடத்தில் சீனா appeared first on Dinakaran.
