×

காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன்: மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்

அகமதாபாத்: மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மகன் பைசல் படேல் இனி காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.மாநிலங்களவை எம்பியாகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளராக பணியாற்றியவர் அகமது படேல். இவர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.

இந்நிலையில் அகமது படேலின் மகனான பைசல் படேல் எக்ஸ் தள பதிவில், ‘‘மிகுந்த வலி மற்றும் வேதனையுடன் காங்கிரஸ் கட்சியில் பணி செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். எனது தந்தை தனது வாழ்நாள் முழுவதும் நாடு, கட்சி மற்றும் காந்தி குடும்பத்துக்காக உழைத்தார். நான் அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற முயற்சித்தேன். ஆனால் ஒவ்வொரு அடியிலும் மறுக்கப்பட்டது. நான் மனிதகுலத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன்: மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Ahmed Patel ,Ahmedabad ,Faisal Patel ,Rajya Sabha ,treasurer ,political secretary ,president ,Sonia Gandhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!