- வெள்ளப்பனேரி
- சங்கரன்கோவில்
- தென்காசி வடக்கு மாவட்டம்
- திமுக செயலாளர்
- ராஜா எம்.எல்.ஏ...
- வெள்ளப்பனேரி கிராமம்
- தின மலர்
சங்கரன்கோவில், பிப்.15: சங்கரன்கோவில் அருகே வெள்ளப்பனேரி கிராமத்தில் அயோத்தி தாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.24.90 லட்சம் மதிப்பில் மயான சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய மயான சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விழாவில் மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், துணை தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ்,பெரியதுரை, அன்பழகன், நகர செயலாளர் பிரகாஷ், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி விஜயன், கிளை செயலாளர்கள் சாமிதுரை, முத்துசாமி, ஜோசப், மாரித்துரை, மகேந்திரராஜ், தொண்டர் அணி செல்வராஜ், சீனிவாசன், இளைஞர் அணி சத்தியபாரதி, பொறியாளர் அணி ஜேகப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வெள்ளப்பனேரி கிராமத்தில் ரூ.24.90 லட்சத்தில் மயான சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.
