×

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி

சென்னை: பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்ஐ கோபு குடும்பத்திற்கு 1997 பேட்ச் சக காவலர்கள் ஒருங்கிணைந்து அளித்த நிதி உள்பட ரூ.15 லட்சத்திற்கான காசோலையை போலீஸ் கமிஷனர் அருண் வழங்கினார். சென்னை பெருநகர காவல்துறையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு எஸ்ஐ சி.கோபு பணியில் இருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு 11.9.2024ம் ஆண்டு உயிரிழந்தார்.

இறந்த சிறப்பு எஸ்ஐ கோபுவின் 3 மகன்கள் படிப்பு மற்றும் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு கோபு தமிழ்நாடு காவல்துறையில் இவருடன் பணியில் சேர்ந்த 1997 பேட்ச் சக காவலர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ் அப் குழு மூலம் மொத்தம் ரூ.14 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டது.

பின்னர் போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த கோபுவின் மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 3 மகன்களை நேரில் அழைத்து வழங்கி அறுதல் கூறினார்.இந்நிகழ்ச்சியின் போது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, நிர்வாக பிரிவு துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் காவலர் நலன் மற்றும் எஸ்டேட் துணை கமிஷனர் மெகலீனா ஐடன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Special SI ,Chennai ,Police Commissioner ,Arun ,Gobu ,Rajiv Gandhi government ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா