×

38வது தேசிய விளையாட்டு போட்டிஜாவ்லின் த்ரோ: ‘சச்சின்’ புதிய சாதனை

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 38வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஜாவ்லின் த்ரோ இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த போட்டியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயது சச்சின் யாதவ் 84.39 மீட்டர் தூரம் வீசி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன் அரியானாவை சேர்ந்த ராஜேந்திர சிங் (82.23 மீட்டர்) வீசியதே சாதனையாக இருந்தது. 2வது இடத்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோகித் யாதவ் (80.47 மீட்டர்) மற்றும் உத்தரகாண்ட்டை சேர்ந்த விகாஸ் சர்மா (79.3 மீட்டர்) ஆகியோர் பிடித்தனர். இந்த போட்டியில் 85.50 மீட்டர் வீசி இருந்தால், இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் நேரடியாக சச்சின் யாதவ் தகுதி பெற்றிருப்பார். ஆனால், 84.39 மீட்டர் மட்டுமே வீசியதால் இந்த வாய்ப்பை சச்சின் யாதவ் இழந்தார். இதுகுறித்து சச்சின் யாதவ் கூறுகையில், ‘என்னுடைய இலக்கு உலக தடகள சாம்பியன்ஸ்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதுதான். அதை தவறவிட்டேன். என்னுடைய இலக்கை நெருங்கி வந்தேன். அடுத்த முறை இந்த இலக்கை அடைவேன்’ என்றார்.

The post 38வது தேசிய விளையாட்டு போட்டிஜாவ்லின் த்ரோ: ‘சச்சின்’ புதிய சாதனை appeared first on Dinakaran.

Tags : 38th National Games Javelin Throw ,Sachin ,Dehradun ,38th National Games ,Uttarakhand ,Sachin Yadav ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்