- இந்தியா
- தென் கொரியா
- கலப்பு அணி
- கிங்டாவ்
- ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்
- சீனா
- கொரியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சதீஷ்குமார் கருணாகரன்
- த்ரிஷா ஜாலி
- காயத்ரி கோபிசந்த்
- ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன்
- தின மலர்
ஜிங்டாவ்: ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியி சீனாவில் நடக்கிறது. அதன் டி பிரிவு அணியான இந்தியா நேற்று கொரியா உடன் மோதியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் சதீஷ்குமார் கருணாகரன், பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிசா ஜாலி/காயத்ரி கோபிசந்த ஆகியோர் இந்தியா சார்பில் வெற்றிப் பெற்றனர். அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா/தனிஷா கிறஸ்டோ, பெண்கள் ஒற்றையர் பிரிவில் மாளவிகா பன்சூட், ஆண்கள் இரட்டையர் பிரிவில் எம்.ஆர்.அர்ஜூன்/சாத்விக் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். அதனால் இந்தியா 2-3 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வியை சந்தித்தது. எனினும் டி பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த கொரியா, சீனா அணிகள் காலிறுதிக்கு ஏற்கனவே முன்னேறி விட்டன. இந்த 2 அணிகளிடமும் தலா 0-5 என்ற கணக்கில் தோற்ற மக்காவ் சீனா போட்டியில் இருந்து வெளியேறியது.
The post ஆசிய கலப்பு அணி பேட்மின்டன் தென் கொரியாவுடன் இந்தியா தோல்வி appeared first on Dinakaran.
