சென்னை: கோடம்பாக்கத்தில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், அருகில் உள்ள வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். இவரை, கோடம்பாக்கம் காமராஜர் காலனி 1வது தெருவை சேர்ந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா (35) என்பவர் தவறான நோக்கத்தில் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளர். ஆனால் அந்த பெண் போபண்ணா ராஜேஷ் கண்ணாவை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 9ம் ேததி கோடம்பாக்கம் என்டிஆர் தெருவில் உள்ள வீட்டில் பணி முடிந்து குப்பையை அருகில் உள்ள குப்பை தொட்டியில் வீசுவதற்கு அந்த பெண் வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா, சாலையில் யாரும் இல்லாததை கண்டு, அந்த ெபண்ணை கையை பிடித்து இழுத்து தவறான நோக்கில் கீழே தள்ளி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தியபோது, பெண்ணிடம் அந்த நபர் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் போபண்ணா ராஜேஷ் கண்ணா (35) மீது கொலை மிரட்டல், ெபண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெய்து கைது செய்தனர்.
The post சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.
