×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சாதனை ஆண்டாக கொண்டாடுவோம்: அமைச்சர் சா.மு.நாசர் அழைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் காக்களூரில் மாவட்ட அவைத் தலைவர் மா.இராஜி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், சி.ஜெரால்டு, பிரபு கஜேந்திரன், வி.ஜெ.சீனிவாசன். எஸ்.ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீ தர், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனாசுதாகர், எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது; திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானமு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இந்தாண்டு சாதனைகளின் திருவிழாவாக பொதுமக்களின் நலம்பயக்கும்படி கொண்டாடப்பட வேண்டும். திமுகவுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் பெருமை சேர்க்கும் முதலமைச்சர் பிறந்தநாளை மக்களின் விழாவாக கொண்டாடு வேண்டும்.

கழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் கழக கொடியை ஏற்றி, ஏழை, எளியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நரிக்குறவர்கள் மற்றும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அறுசுவை உணவு வழங்க வேண்டும். மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும். இவ்வாறு பேசினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மிக விமரிசையாக பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்களுக்கு கை கடிகாரம் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இதில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் சன்.பிரகாஷ், தேசிங்கு ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, சே.பிரேம்ஆனந்த், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, பேபிசேகர், பொன்விஜயன், நாராயண பிரசாத், தி.வே.முனுசாமி, தங்கம் முரளி, புஜ்ஜி ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஏ.ஜெ.பவுல், வி.ஜெ.உமா மகேஸ்வரன், வி.தியாகராஜன், குமரேசன், எம்.மோகன், விமல் ஆனந்த், சௌந்தரராஜன் கலந்துகொண்டனர்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சாதனை ஆண்டாக கொண்டாடுவோம்: அமைச்சர் சா.மு.நாசர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. ,Stalin ,Minister Cha. M. Call Nassar ,Thiruvallur ,Thiruvallur Central District Council Meeting ,Kakhalur ,District ,Chief MLA ,A. Krishnasamy ,MLA ,K. J. Ramesh ,C. Gerald ,Prabhu Gajendran ,V. J. Sinivasan ,S. Jayabalan ,Gayatri Sri Dhar ,Ayuvur Pa ,Naresh Kumar ,M.U. K. Let ,Minister Cha. M. Nassar ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...