×

38-வது தேசிய விளையாட்டு போட்டி: ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் இளம் வீரர் பிரவீன் சித்ரவேல்

டேராடூ: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான தடகளம் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற மன்னார்குடி அடுத்த செட்டிச்சத்திரம் சோனாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் என்பவர் 16. 50 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ள இளம் வீரர் பிரவீன் சித்ரவேலுவிற்கு தொழில் முதலீட்டு உக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

The post 38-வது தேசிய விளையாட்டு போட்டி: ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் appeared first on Dinakaran.

Tags : 38th National Sports Tournament ,Tamil Nadu ,Praveen Chitravel ,Dehradun ,Dehradun, Uttarakhand ,Sonapete Periyar Nagar ,Praveen ,Tamil ,Nadu ,Mannarkudi ,Triple Jump ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்