- தைப்பூச தேர் ஊர்வலம்
- கொடும்பு சுப்பிரமணியர் சுவாமி கோயில்
- பாலக்காடு
- தைப்பூச தேர் ஊர்வல விழா
- பாலக்காடு மாவட்டம்
- வேதப்பராயணம்
- கொடும்பு
- சுப்ரமணியர்
- சுவாமி கோயில்
பாலக்காடு, பிப்.13: பாலக்காடு மாவட்டத்தில் பிரபலமான கொடும்பு சுப்ரமணியர் சுவாமி கோயிலில் தைத்பூசத் தேரோட்ட திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக-அலங்கார பூஜைகள், வேதப்பாராயணம் ஆகியவை நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் முதல் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷங்கள் எழுப்பி தேர்களின் வடங்கள் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று 2ம் நாள் தேரோட்டத்தில் மதல்நாள் தேர்முட்டிவீதியில் நிலையுறசெய்த விநாயகர், வீரவாகு ஆகிய உற்சவமூர்த்தியினர் ரதத்தையும், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர் ரதத்தையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கரகோஷங்கள் எழுப்பியப்படி செண்டைவாத்யம், நாதஸ்வரம், தாரைத்தப்பட்டை வாத்தியங்கள் அதிர தேரோட்டம் வெகுவிமர்சையாக நேற்று மாலை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 7 மணிக்கு 2 தேர்களும் தேர்முட்டிவீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post கொடும்பு சுப்ரமணியர்சுவாமி கோயிலில் 2ம் நாள் தைப்பூச தேரோட்டம் appeared first on Dinakaran.
