×

அமைச்சர் பெரியகருப்பனுடன் கூட்டுறவு பண்டகசாலை பணியாளர் சங்கத்தினர் சந்திப்பு: புதிய ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை அளித்தனர்

சென்னை: தமிழ்நாடு மாநில நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் பணியாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் 31ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி புதிய ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை தொ.மு.ச.பேரவைத்தலைவர் கி.நடராஜன், பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்பி, பொருளாளர் கோ.சி.வள்ளுவன், துணைத்தலைவர் இரா.பொன்னுராம் ஆகியோரின் அனுமதியுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மாநில பொதுச்செயலாளர் டியுசிஎஸ் சு.பத்மநாபன் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை வழங்கினார். சந்திப்பின் போது மாநிலத்தலைவர் து.பிச்சை, டியுசிஎஸ் தி.தொ.மு.ச. பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன், சென்னை சிந்தாமணி தொ.மு.ச.பொதுச்செயலாளர் ஜெ.அலிசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அமைச்சர் பெரியகருப்பனுடன் கூட்டுறவு பண்டகசாலை பணியாளர் சங்கத்தினர் சந்திப்பு: புதிய ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை அளித்தனர் appeared first on Dinakaran.

Tags : Cooperative Warehouse Employees Union ,Minister ,Periyakaruppan ,Chennai ,Tamil Nadu State Consumer Cooperative Wholesale Warehouse Employees ,TMC ,President ,K. Natarajan ,Dinakaran ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!