- Pandalur
- சுகாதார துறை
- தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தேசிய குடற்புழு நீக்க தினம்
- மாவட்ட மருத்துவ அலுவலர்
- கதிரவன்
பந்தலூர், பிப்,12:பந்தலூர் அருகே தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் தேசிய குடல்புழு நீக்கம் நாளையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது:
சுகாதாரத்துறை சார்பில் அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் குடல் புழு மாத்திரைகள் சாப்பிடுவதால் ரத்தசோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சீராகும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் படிப்பில், விளையாட்டில் ஆர்வம் ஏற்படும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி டீன் மோகன்பாபு, கல்லுரி முதல்வர் பால சண்முக தேவி, டாக்டர்கள் ஜனார்த்தனன், சுயப், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாலர்கள் கணையேந்திரன், நிஷார், பகுதி சுகாதார செவிலியர் பிரபாவதி, சமூகநலத்துறை குமார், குழந்தை பாதுகாப்பு அலுவலர் தவமணி மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post தேசிய குடல்புழு நீக்கம் குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.
