×

முத்துப்பேட்டையில் வுமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் தேர்வு

முத்துப்பேட்டை, பிப்.12: முத்துப்பேட்டை எஸ்டிபிஐ மகளிர் அணியான வுமன் இந்தியா முவ்மெண்ட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு எஸ்டிபிஐ நகர தலைவர் வழக்கறிஞர் ராஜ்முகமது தலைமை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் அப்துல் மாலிக் வரவேற்றார். நகர பொருளாளர்தமீம் அன்சாரி பேரூராட்சி குறைநிறைகளை சுட்டிக்காட்டினார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மண்டல தலைவர்தப்ரே ஆலம் பதுஷா, மாவட்ட தலைவர் மாஸ். அப்துல் அஜீஸ், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் லத்திப், மாவட்ட செயலாளர் ஜாஸ் கலந்துகொண்டனர். இதில் வுமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் நகர தலைவராக சபிரா பானு, துணைத்தலைவராக மெஹர் நிஷா, நகர செயலாளராக பெனசீரா பைசல், துணைச்செயலாளராக பர்வின், பொருளாளராக நுஸ்ரத், நகர செயற்குழு உறுப்பினர்களாக ரிஃபயா, அரபு, ஜன்னத், ஹபிப் நிஷா, சகிலா, ஜும்மா அம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவில் நகர துணைத் தலைவர் மெஹர் நிஷா நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டையில் வுமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Women India Movement ,Muthupettai ,STBI ,wing ,president ,Advocate Rajmuhammed ,city secretary ,Abdul Malik ,treasurer ,Tamim Ansari ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...