×

ஏலச்சீட்டு நடத்தி ரூ1.5 கோடி மோசடி: 2 பேர் கைது


வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த ஜல்லடியன்பேட்டை, சுப்ரமணி நகர், 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (35). வீரத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அசோக் குமார் (33). இருவரும் சேர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதியில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு மற்றும் மகளிர் குழு நடத்தி வந்துள்ளனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் சீட்டு முடிந்த பிறகு பணம் கொடுக்காமல் அலைகழித்து வந்துள்ளனர். மேலும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று திருப்பி கொடுத்தவர்கள் பணத்தையும் வங்கியில் திருப்பி கட்டவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கபட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிகரணை போலீசில் புகார் செய்தனர். குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், இருவரும் சேர்ந்து சுமார் ரூ1.5 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமி மற்றும் அசோக்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து சீட்டு கட்டியவர்களுக் சீட்டு முடிந்தவுடன் பணத்தை தராமல் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளனர். வட்டிக்கு வாங்கியவர்கள் பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணத்தில் கார். புல்லட் இரண்டு ஆட்டோக்கள் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலர் புகார் கொடுத்தால் பல கோடி மோசடியில் இருப்பதால் வழக்கை தாம்பரம் மாநகர குற்றபிரிவுக்கு மாற்ற முடிவு செய்து உள்ளனர்.

The post ஏலச்சீட்டு நடத்தி ரூ1.5 கோடி மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Velachery ,Mahalakshmi ,Subramani Nagar ,1st Cross Street, Jalladianpet ,Ashok Kumar ,Veerathamman Koil Street ,Pallikaranai, Jalladianpet ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...