×

தேசவிரோத செயல்களுக்கு பயன்படுவதை தடுக்க ஜம்மு காஷ்மீரில் சிம் கார்டு சரி பார்ப்பு பணி தொடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொபைல் சிம் கார்டு விற்பனை செய்பவர்கள் போலியான பெயரில் சிம் கார்டுகளை விற்பனை செய்வது, ஒருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மற்றொருவருக்கு சிம் கார்டு விற்பனை செய்வது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அண்மையில் ஸ்ரீநகர், அனந்த்நாக், புல்வாமா, பட்காம், ஷோபியான், பந்திபோரா, சம்பா மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஒரேவாரத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், ஜம்மு காஷ்மீரின் சில சிறைகளில் உள்ள கைதிகளிடமிருந்து சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சிம் கார்டுகள் சரி பார்க்கும் பணியை காவல்துறை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் சிம் கார்டு விற்பனை மோசடி, சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக சிம் கார்டு சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. அனந்த்நாக், புத்காம், புல்வாமா மாவட்டங்களில் தற்போது நடந்து வரும் சிம் கார்டு சரி பார்ப்பு நடவடிக்கை பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்” என்றனர்.

The post தேசவிரோத செயல்களுக்கு பயன்படுவதை தடுக்க ஜம்மு காஷ்மீரில் சிம் கார்டு சரி பார்ப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...