×

கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (71). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி, இவரது கடையின் ஷட்டரை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட போரூர், ஆற்காடு சாலையைச் சேர்ந்த சஞ்சய் (21) மற்றும் சிவமூர்த்தி (21) ஆகிய இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Thangaraj ,Vellanoor ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...