×

பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்லாம்: அமெரிக்க வீரர் கரவுனாவிடம் காலிறுதியில் குகேஷ் தோல்வி


ஹாம்பர்க்: ஜெர்மனியில் நடந்த பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவிடம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் தோல்வி அடைந்தார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெய்ஸென்ஹாஸ் பிரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனா, நேற்று முன்தினம் நடந்த காலிறுதிப் போட்டியில் மோதினர். இரு முறை மோதக்கூடிய இந்த போட்டியில் இரு முறையும் குகேஷ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, கரவுனா அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவர், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் ஸின்டரோவ் – மற்றொரு அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா இடையிலான போட்டியில் வெற்றி பெறுபவருடன் அரை இறுதியில் மோதுவார். மாறாக, வரும் நாட்களில் 5-8 இடங்களுக்கான போட்டிகளில் குகேஷ் மோதவுள்ளார்.

The post பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்லாம்: அமெரிக்க வீரர் கரவுனாவிடம் காலிறுதியில் குகேஷ் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Freestyle Chess Grand Slam ,Kukesh ,Caruana ,Hamburg ,Fabiano Caruana ,Germany ,Weissenhaus Freestyle Chess Grand Slam ,Hamburg, Germany ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்...