×

தா.பழூரில் 34 ஆண்டு லயன் சங்க முதல் பிரியம் சேவை மண்டல மாநாடு

தா.பழூர், பிப். 11: அரியலூர் மாவட்டம், தா.பழூரில் 34 ஆண்டு லயன் சங்க முதல் பிரியம் சேவை மண்டல மாநாடு தா.பழூரில் நடைபெற்றது. இந்த மாநாடு மண்டல தலைவர் லயன் ச. ஜேசுராஜ் தலைமையில் நடைபெற்றது. 324 எப் லயன்ஸ் மாவட்டத்தின் ஆளுநர் பொறியாளர் சவரி ராஜ், முன்னாள் பன்னாட்டு இயக்குனர் சம்பத், இயக்குனர் ஸ்டீபன் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட 12 ஆளுநர்கள் கலந்துகொண்டு ரூபாய் 3 லட்சத்தில் நலத்திட்ட சேவைகள் வழங்கப்பட்டது. மாவட்ட அமைச்சரவை தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் , மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், மண்டலத்திற்கு உட்பட்ட 13 சங்கங்களின் தலைவர்கள் , செயலாளர்கள், பொருளாளர்கள் என சுமார் 1000 க்கும் மேலான லயன்ஸ் உறுப்பினர்கள் , பேட் தொண்டு நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் பயனாளிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற செயலான்மை குழு தலைவர் ராஜன் வரவேற்க செயலான்மை குழு செயலாளர் அலெக்ஸ்சான்டர் நன்றி கூறினார்.

The post தா.பழூரில் 34 ஆண்டு லயன் சங்க முதல் பிரியம் சேவை மண்டல மாநாடு appeared first on Dinakaran.

Tags : 34th Annual Lion Sangam First Priyam Seva Zonal Conference ,Tha.Pazhur. ,Tha.Pazhur ,Tha.Pazhur, Ariyalur District ,Zonal ,President ,Lion S. Jesuraj ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை