×

கொடைக்கானல் வட்டக்கானல் அருவியின் அழகை மேம்படுத்த உத்தரவு

 

கொடைக்கானல், பிப். 11: கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாவட்ட கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.  வட்டக்கானல் பகுதியில் ஆய்வு செய்த போது கலெக்டர், அருவியின் அழகை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.  மேலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் அருவியில் கொட்டும் தண்ணீரை தூய்மைப்படுத்தவும், இங்குள்ள பாலம் அருகில் மண்டி கிடக்கும் புதர் செடிகளை அகற்றி நீர்த்தேக்கம் அமைக்கவும் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

The post கொடைக்கானல் வட்டக்கானல் அருவியின் அழகை மேம்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Vattakanal ,Kodaikanal ,District Collector ,Saravanan ,Vattakanal ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை