×

மன்னார்க்காடு-ஆனைக்கட்டி சாலையில் 20 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

 

பாலக்காடு, பிப். 11: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு-ஆனைக்கட்டி சாலையில் ஆனைமூழியில் தனியார் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 10 பேர் காயமடைந்தனர். அட்டப்பாடி ஜெல்லிப்பாறையை சேர்ந்தவர்கள் 10 பேர் சுற்றுலா வேனில் அட்டப்பாடியிலிருந்து மன்னார்க்காடு, கோழிக்கோடு, வயநாட்டிற்கு சுற்றுலா சென்றனர். அப்போது, வேன் ஆனைமூழி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழ்ந்து வேன் 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில், அட்டப்பாடி ஜெல்லிப்பாறையைச் சேர்ந்த 10 பேர் மற்றும் டிரைவர் உட்பட 11 பேர் படுகாயங்களுடன் மன்னார்க்காட்டிலுள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மன்னார்க்காடு-ஆனைக்கட்டி சாலையில் 20 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Mannarkkad-Anaikatti road ,Palakkad ,Anaimoozhi ,Palakkad district ,Kerala ,Attappadi Jelliparai ,Attappadi ,Mannarkkad ,Kozhikode ,Wayanad… ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி