×

நடனமாடிய போது திடீர் மாரடைப்பு; திருமண மேடையில் இளம்பெண் மரணம்: மத்தியபிரதேசத்தில் சோகம்


போபால்: மத்தியபிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்தூரில் வசிக்கும் பர்னிதா ஜெயின் (23) என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இளம்பெண்ணும் கலந்து கொண்டார். இசை கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, பர்னிதா ஜெயின் உள்ளிட்ட சில பெண்கள் மேடையில் ஆட்டம் போட்டனர். ‘லெஹ்ரா கே பால்கா கே’ என்ற பாலிவுட் பாடலுக்கு பெண்கள் நடனமாடிய போது பர்னிதா ஜெயினும் குத்தாட்டம் போட்டார். திடீரென அவர் மேடையில் சரிந்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர், அவருக்கு சிபிஆர் முதலுதவி கொடுக்க முயன்றனர்; ஆனால் பலனளிக்காமல் பர்னிதா ெஜயின் இறந்துவிட்டார். இந்தூரை சேர்ந்த பர்னிதா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மேடையில் ஆடுவதும், சரிந்து விழுந்து இறப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பர்னிதாவுடன் இரட்டையர்களாக பிறந்த அவரது சகோதரர் 12 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டும்போது மாரடைப்பால் இறந்துவிட்டார்.

The post நடனமாடிய போது திடீர் மாரடைப்பு; திருமண மேடையில் இளம்பெண் மரணம்: மத்தியபிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Vidisha region ,Parnitha Jain ,Indore ,Parnitha… ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!