×

ரயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை

சென்னை: கும்பகோணத்தில் ரயில் முன் பாய்ந்து சென்னை தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா கபிஸ்தலத்தை சேர்ந்தவர் மனோகரன் (60). சென்னை திருவேற்காட்டில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களாக தனிப்பட்ட பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனோகரன் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்தார். அப்போது வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.15 மணிக்கு கும்பகோணம் வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் திடீரென மனோகரன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து கும்பகோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Businessman ,Chennai ,Kumbakonam ,Manoharan ,Kapisthalam ,Papanasam taluka, ,Thanjavur district ,Thiruverkot, Chennai ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்