×

கிரிக்கெட், கோகோ போட்டியில் சாதனை படைத்த கமலினி, சுப்பிரமணிக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கிரிக்கெட், கோகோ போட்டியில் சாதனை படைத்த கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஜி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2ம்தேதி வரை நடந்தன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கமலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர், தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரைச்சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமலினி பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், டெல்லியில் நடந்த முதல் கோகோ உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் 19ம்தேதி வரை நடந்தன.

இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக ‘‘சிறந்த தொடு தாக்கு வீரர் விருது” வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோகோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கிரிக்கெட் வீராங்கனை கமலினி மற்றும் கோகோ வீரர் வி. சுப்ரமணி ஆகியோரது சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.

The post கிரிக்கெட், கோகோ போட்டியில் சாதனை படைத்த கமலினி, சுப்பிரமணிக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Kamalini ,Subramani ,Chennai ,G20 Women's Under-19 Cricket World Cup ,Malaysia ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...