- தேசிய பசுமைப் படை
- Kollimalai
- Senthamangalam
- ஆகயா கங்கை நீர்வீழ்ச்சி
- சித்தர்
- குகைகள்
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை
- நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப் படை...
சேந்தமங்கலம் : கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சித்தர் குகைகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கொல்லிமலையில் ஒன்றிய, மாநில அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மூலம், அரசு பள்ளியில் படிக்கும் 150க்கு மேற்பட்ட பசுமை படை மாணவ, மாணவிகளுக்கு மலையேற்றம் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு அங்குள்ள அரிய வகை மரங்கள், பூச்சிகள், மூலிகைகள் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள், செடி கொடிகள் குறித்து வனத்துறையின் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் அரப்பளீஸ்வரர் கோயில் எதிரே உள்ள 1200 படிக்கட்டுகளை கடந்து, அங்குள்ள புகழ் பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை, போகர் சித்தர் வாழ்ந்த குகையை பார்வையிட்டு, சுற்றுலா பயணிகள் வீசி சென்ற உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அகற்றினர்.
தேசிய பசுமை படை மாணவ, மாணவிகள், கொல்லிமலைக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகளிடம் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வரக்கூடாது. குடிநீர், குளிர்பானம் காலி பாட்டில்களை, சுற்றுலா தலங்களில் வைக்கப்பட்டுள்ள இரும்பு கூண்டுக்குள் போட்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.
The post கொல்லிமலையில் தேசிய பசுமை படை மாணவர்கள் தூய்மை பணி appeared first on Dinakaran.
