×

ஒப்புதல் அளிக்கப்படாத மசோதாக்கள் காலாவதியாகிடும் என்றால், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது எப்படி? : ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது எப்படி முடியும் ? மசோதாக்களை நிறுத்தி வைத்த பின்னர், பிறகு எப்படி குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு மசோதாக்களை அனுப்ப முடியும்?ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள், அப்படியெனில் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் ?,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒப்புதல் அளிக்கப்படாத மசோதாக்கள் காலாவதியாகிடும் என்றால், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது எப்படி? : ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamil Nadu government ,Tamil ,Nadu ,Governor ,Ravi ,Rakesh Dwivedi ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...