×

புதுவையிலேயே ஜெயிக்கல. இதுல தமிழ்நாடு வேறயா? ரங்கசாமியை கலாய்த்த நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசியதாவது: என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 15ம் ஆண்டு விழாவில், தமிழ்நாட்டிலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி கூறியிருக்கிறார். புதுச்சேரியில் ஒன்றும் செய்யாமல் தமிழ்நாட்டில் போட்டியிட போகிறாராம். ஏற்கனவே விஜய் உடன் கூட்டு உள்ளது.

இவர் விஜய் உடன் கூட்டு இருப்பாரா? அல்லது பாஜவுடன் கூட்டு இருப்பாரா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் வருகிறது. அங்கும் ரங்கசாமி வேட்பாளரை நிறுத்துவார். ஆந்திராவில் உள்ள ஏனாமில் ரங்கசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அங்கு போணியாகவில்லை. இவர் தமிழகத்தில் போட்டியிட போகிறாராம். இவ்வாறு அவர் பேசினார்.

The post புதுவையிலேயே ஜெயிக்கல. இதுல தமிழ்நாடு வேறயா? ரங்கசாமியை கலாய்த்த நாராயணசாமி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Congress ,Union ,Former ,Chief Minister ,Narayanasamy ,NR Congress party ,Rangasamy ,NR Congress ,Tamil Nadu ,
× RELATED 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த...