- உச்ச நீதிமன்றம்
- சோட்டா ராஜன்
- சிபிஐ
- புது தில்லி
- ஜெயா ஷெட்டி
- கோல்டன் கிரவுன் ஹோட்டல்
- மும்பை
- காம்தேவி
- தின மலர்
புதுடெல்லி: ஓட்டல் உரிமையாளர் கொல்லப்பட்ட வழக்கில் சோட்டா ராஜன் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரம் கெடு விதித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மும்பையின் காம்தேவியில் உள்ள கோல்டன் கிரவுன் ஓட்டலின் உரிமையாளரான ஜெயா ஷெட்டி ஓட்டலின் முதல் மாடியில் பிரபல ரவுடியான சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்த ஹேமந்த் புஜாரியிடம் இருந்து ஷெட்டிக்கு மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புக்கள் வந்ததாகவும், பணத்தை செலுத்த தவறியதால் அவர் கொல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. ஷெட்டி கொலை வழக்கில் கடந்த மே மாதம் சோட்டா ராஜனை குற்றவாளி என்று கண்டறிந்து சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, அவருக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வானது சோட்டா ராஜன் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
The post சிபிஐ மேல் முறையீட்டு வழக்கில் சோட்டா ராஜனுக்கு 4 வாரம் கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
