×

உறுதி மொழி ஏற்பு

 

சிவகாசி, பிப். 8: சிவகாசி மாநகராட்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அனைத்து அரசு துறை அலுவலர்களும், ஊழியர்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதே போன்று சிவகாசியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

The post உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Corporation ,Bonded Labor Abolition Day ,Mayor ,Sangeetha Inpam ,Commissioner ,Krishnamurthy ,
× RELATED ஓய்வூதியர் தின விழா