×

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வெளிநாட்டு சிறைகளில் மொத்தம் 10,152 இந்தியர்கள் உள்ளதாக மக்களவையில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் எத்தனை பேர் உள்ளனர். அந்த நாடுகளின் விவரங்கள் என்ன என்பது பற்றி மக்களவை உறுப்பினர் ஒருவர் கேட்டார்.

அந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்: சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை, ஸ்பெயின், ரஷ்யா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், அர்ஜென்டினா உள்ளிட்ட 86 நாட்டு சிறைகளில் இந்திய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசா மீறல்கள் மற்றும் நிதி தகராறுகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றவியல் குற்றச்சாட்டுகள் போன்ற கடுமையான குற்றங்களுக்காக 10,152 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் விசாரணை கைதிகள். அதிகபட்சமாக சவுதியில் 2,633 பேர், ஐக்கிய அரபு எமிரேட்டில் 2518 பேர் உள்ளனர். நேபாளத்தில் 1,317 ,பாகிஸ்தானில் 266, இலங்கையில் 98 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,New Delhi ,Indians ,Union External Affairs Minister ,Kirti Vardhan Singh ,Lok Sabha ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...