புதுடெல்லி: பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3வது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால், 2017 முதல் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நிர்வாகிகள் இடையிலான மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறைகள் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (ஃபிபா) உத்தரவிட்டுள்ளது. இதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 முதல் இந்த சிறப்பு குழு பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும் பாக். கால்பந்து கூட்டமைப்பு நடைமுறைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், பாக். கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாக். கால்பந்து கூட்டமைப்பு 3வது முறையாக தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. ஃபிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இத்தடை விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
The post பாக். கால்பந்துக்கு சோதனை: 3வது முறை தடை ஃபிபா அதிரடி appeared first on Dinakaran.
