- நீடாமங்கலம்,
- மன்னார்குடி
- நீடாமங்கலம்
- நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்
- மன்னை-சென்னை
- Bamani
- மன்னை-திருப்பதி
- மன்னை-கோயம்புத்தூர்
- செம்மொழி
- மன்னை-ஜோத்பூர்
- எர்ணாகுலம்-
- காரைக்கால்
- கோவா-வேளாங்கண்ணி
நீடாமங்கலம், பிப்.7: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ரயில்வே ஜங்ஷன் உள்ளது. நீடாமங்கலம் ரயில்வே ஜங்ஷனுக்கு மன்னை-சென்னை(பாமனி), மன்னை-திருப்பதி, மன்னை-கோவை (செம்மொழி), மன்னை-ஜோத்பூர், எர்ணாகுளம்-காரைக்கால், கோவா-வேளாங்கண்ணி உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் உள்ளிட்ட ரயில்கள் செல்வதாலும், இதனால் நீடாமங்கலம் ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே கேட் நாள் ஒன்றுக்கு 17 அல்லது 20 தடவையாவது மூடப்படும் நிலை ஏற்பட்டது. இதனால்பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வந்தனர். இதனையறிந்த ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்ட வேண்டும் என அரசியல் கட்சியினர்,தொண்டு அமைப்பினர் அரசுக்கு பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும்,கோரிக்கை விடுத்தனர்.
இதனையறிந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் 110 விதியின்படி நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே இருந்தது. அதற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. பின்னர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் மன்னார்குடி சட்ட மன்ற தொகுதிக்கு மூன்றாவது முறையாக போட்டியிட்ட டி.ஆர்.பி.ராஜா (தற்போதைய அமைச்சர்) தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் (கடவு சாலை ) கட்டப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி டி.ஆர்.பி ராஜா பரிந்துரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் (கடவு சாலை) கட்டப்படும் என அறிவித்து அதற்கான ரூ.170 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில், அமைச்சர் எ.வ.வேலு நீடாமங்கலத்தில் உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். அதன் பிறகு மண் பரிசோதனைகள் நடைபெற்று தற்போது கடந்த ஐந்நு மாதங்களாக நீடாமங்கலம் -தஞ்சை சாலை பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான பெரிய இயந்திரங்களை வைத்து பில்லர் குழிகள் தோண்டி பில்லர் (தூண்கள்) அமைத்து பாலம் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று ஒரத்தூர் திருவள்ளுவர் நகர் எதிரே சாலையை அகலப்படுத்த பாமணியாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணியும் மும்முரமாக நடை பெற்று முடிந்துள்ளது. இந்த மேம்பாலம் கட்டும் பணி இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை சாலை கோயில்வெண்ணியிலிருந்து, நார்த்தாங்குடி வழியாக நாகை வரை பைபாஸ் சாலை திறக்கப்பட்டு அதில் கனரக வாகனங்கள், டாரஸ் லாரிகள், வேளாங்கண்ணி, நாகூர், பூம்புகார், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலையில் செல்வதால் நீடாமங்கலத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. தற்போது நீடாமங்கலத்தில் மும்முரமாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் சிரமமின்றி செல்வார்கள். இந்த மேம்பாலம் பாமணியாற்று பாலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் ரயில்வே லைன்மேல் சென்று வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் ரவுண்டானா அமைகிறது. இங்கிருந்து கோரையாற்றின் மேல் பாலம் சென்று ராயல் சிட்டி வழியாக வெண்ணாற்று பாலம் சென்று அங்கிருந்து வாகனங்கள் கும்பகோணம், நாகை மார்க்கத்தில் செல்கிறது. மற்றொரு சாலை ரவுண்டானாவிலிருந்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் எதிரே சென்று அண்ணா சாலை சென்று அங்கிருந்து மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் வாகனங்கள் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மும்முரம்: ஒன்றரை ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
