×

இரு போலீசாரின் ‘போர் தொழில்’

இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ, அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம், ‘போர் தொழில்’. வரும் ஜூன் 9ம் தேதி வெளியாகும் இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோரின் வித்தியாசமான தோற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில், நிகிலா விமல் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தொடர்ச்சியாக சில படுகொலைகள் செய்யும் குற்றவாளியைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட இளம் ேபாலீசைப் பற்றிய கதை கொண்ட இதில், இளம் போலீஸ் ஒரு மூத்த போலீசுடன் இணைந்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. ஆக்‌ஷன் மற்றும் சஸ்பென்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

The post இரு போலீசாரின் ‘போர் தொழில்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : E4 Expressements ,Ephrius Studio ,Ablas Entertainment ,asok selvan ,sarathkumar ,Vignesh Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்