×

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கியது 12 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: அக்னிவீர் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கியது. ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா மாவட்ட விளை யாட்டரங்கில் முகாம் இன்று தொடங்கி 9ம்தேதி வரை நடைபெற உள்ளது. ராணுவத்தின் அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர விண்ணப்பித்துள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்று தங்களது தகுதிகளை நிரூபிக்க வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமல்லாது தெலங்கானா, ஆந்திராவை சேர்ந்தவர்களும் முகாமில் கலந்து கொள்கின்றனர். அக்னிவீர் டெக்னிக், அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி, சோல்ஜர் டெக்னிக், நர்சிங் அசிஸ்டெட்ன்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஆள்சேர்ப்பு முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவை சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் கலந்துகொள்கின்றனர்,

 

The post இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கியது 12 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Kancheepuram ,Kanchipuram ,Agnivir ,Kanchipuram Scholar Anna Sports Arena ,Anna District ,Tamil Nadu ,Camp ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...