×

மத மோதலை தூண்டியதாக எச்.ராஜா மீது வழக்குபதிவு

மதுரை: மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை வழிபாடு பிரச்னை தொடர்பாக கடந்த 4ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மதுரை மாவட்டத்தில் 163 (144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தத்தில் 4ம்தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்த நிபந்தனைளுடன் அனுமதி வழங்கியது.

இதன்படி, போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.ஆர்ப்பாட்டத்தில் ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது. ஆர்ப்பாட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்று பேசும்போது, இரு பிரிவினரிடையே மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, அவர் மீது சுப்ரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

The post மத மோதலை தூண்டியதாக எச்.ராஜா மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Madurai ,BJP ,Hindu Front ,Madurai Thiruparankundram ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி