×

ஆம்னி பஸ்சில் பயணி பலி

மதுரை, பிப். 6: ஓடும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தவர் பலியானது குறித்து, மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனியார் ஆம்னி பஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருபவர் செல்வம்(44). இவரது தம்பி பாஸ்கர்(40). திருமணம் ஆகாத இவர், பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார்.

பின்னர் அடிக்கடி போனில் மட்டும் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பஸ்சில் பாஸ்கர் மதுரை புறப்பட்டார். பின் திடீரென பஸ்சிற்குள் வாந்தி எடுத்து மயங்கினார். அவர் மது அருந்தியிருக்கலாம் என, சக பயணிகள் நினைத்தனர். ஆனால் மதுரை மாட்டுத்தாவணி வந்தபோது, அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து ஆம்னி பஸ் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், மாட்டுத்தாவணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்னி பஸ்சில் பயணி பலி appeared first on Dinakaran.

Tags : Omni ,Madurai ,Mattutthavani ,Selvam ,Omni bus ,Tindivanam, Villupuram district ,Bhaskar ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு