- ரூபி மனோகரன்
- சட்டமன்ற உறுப்பினர்
- சீவலப்பெரி
- சாலை
- நெல்லை
- சீவலப்பேரி சாலை
- நாங்குநேரி
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- அரசுப் பொருளாளர்
- நங்கூணி எம்.எல்.ஏ
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
- தின மலர்
நெல்லை, பிப். 6: நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள நீச்சல் வளாகத்தில் ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள நீச்சல் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் சிவா, மாநில நீச்சல் கழக தலைவர் திருமாறன், மாவட்ட நீச்சல் கழகச் செயலாளர் லட்சுமணன், முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் கேப்டன் பிரேம்குமார், மாவட்ட நீச்சல் கழக துணைத் தலைவர் சிவா, பாளை. கிழக்கு வட்டார தலைவர் சங்கரபாண்டி, வடக்கு வட்டார தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ஒபேத், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்துப்பாண்டி, நாகூர் மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சீவலப்பேரி சாலை நீச்சல் வளாகத்தில் ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

