×

ரயில்வே தண்டவாளத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் விரைந்து மேம்பாலம் அமைக்க கோரிக்ைக காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானம், ராணுவ கேன்டீனுக்கு செல்ல

வேலூர், பிப்.6: காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கும், ராணுவ கேன்டீனுக்கும் செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து ேமம்பாலம் அமைக்க ேகாரிக்கை எழுந்துள்ளது. காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானம், ராணுவ கேன்டீன் செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சென்னை, பெங்களூரு மற்றும் சென்னையில் தென் மாநிலங்களுக்கு இவ்வழியாக அதிக அளவுகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் விளையாட்டு மைதானம், ராணுவ கேன்டீனுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் மூடப்பட்ட ரயில்வே கேட்டிற்கு கீழே பைக்கை தள்ளி செல்கின்றனர். இப்படி செல்லும் ஒருசிலர் கீழே விழும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே ரயில்வே தண்டவாளத்தை கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ரயில்வே மேம்பால பணிக்காக எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது. எவ்வளவு நிலம் தற்போது உள்ளது. திட்ட மதிப்பீடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் மேம்பாலம் அமைப்பதற்கான எந்த பணிகள் தொடங்கவில்லை. இதனால் தினந்தோறும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்து ராணுவ கேன்டீனுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘ காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் ராணுவ கேன்டீனுக்கு செல்லும் வழி முக்கிய வழியாக உள்ளது. ரயில்வே கேட் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். அதில், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், திட்ட மதிப்பீடு போன்றவை குறித்து தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரயில்வே தண்டவாளத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் விரைந்து மேம்பாலம் அமைக்க கோரிக்ைக காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானம், ராணுவ கேன்டீனுக்கு செல்ல appeared first on Dinakaran.

Tags : playground ,Katpadi ,Vellore ,playground and ,canteen ,District playground and army canteen ,Katpadi… ,Dinakaran ,
× RELATED புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர்...