மதுரை, பிப். 5: டெல்லியில் கடந்த ஜன.26ம் தேதி நடந்த கலை நிகழ்ச்சிகளில் மதுரையைச் சேர்ந்த மரக்காலாட்ட கலைஞர் கோவிந்தராஜ் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான கிராமிய கலைஞர்கள் பங்கேற்றனர். இவர்கள் இந்தியா கேட் பகுதியில் தலையில் கரகம் உள்ளிட்ட, நமது கலைநிகழ்ச்சிகளுடன் சென்று பார்வையாளர்களை கவர்ந்தனர். டெல்லி குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் முடித்து, அனைவரும் மதுரை திரும்பினர். இவர்கள் மதுரை கலெக்டர் சங்கீதாவை சந்தித்தனர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
The post டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்ற கிராமிய கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.
