×

சர்வதேச செஸ் போட்டியில் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: நெதர்லாந்து நாட்டின் விஜ் ஆன் ஜீயில், 87வது டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில், தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, ஒரே புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தனர். 13வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வியடைந்தனர். இருந்தபோதிலும், இருவரும் ஒரே புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்தனர்.
இதையடுத்து மீண்டும் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரில் யார் வெற்றியாளர் என தீர்மானிப்பதற்காக டை பிரேக்கர் எனப்படும் முறை கடைப்பிடிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

இதில் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதையடுத்து பிரக்ஞானந்தா, டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். பின்னர், நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக, நேற்று காலை பிரக்ஞானந்தா சென்னை வந்தார். விமான நிலையத்தில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் உறவினர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிருபர்களிடம் பிரக்ஞானந்தா கூறுகையில், ‘இந்த தொடரை வென்றது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்தாண்டு என் ஆட்டம் நன்றாக இல்லை. தற்போது முதல் தொடரில், வெற்றி பெற்றுள்ளேன்.இறுதி போட்டி மிகவும் டென்ஷனாக இருந்தது. இறுதி சுற்று டைப் பிரேக்கர் முறையில் நடத்தப்பட்டது. அதில் இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். இதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் நமக்குதான் அந்த பட்டம் கிடைத்திருக்கும். இது மிகவும் பெருமைக்குரிய ஒன்று,’ என்றார்.

The post சர்வதேச செஸ் போட்டியில் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Praggnanandhaa ,Chennai ,87th Tata Steel International Chess Tournament ,Vijn aan Zee, Netherlands ,Kukesh ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291...