×

மாநில டென்னிகாய்ட் போட்டியில் மானூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

மானூர்,பிப்.5: மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர். இதில் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 8ம் வகுப்பு பயிலும் சுராஜ்கோசன் ஜாய், ஸ்ரீநிகேத் ஆகிய மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிகாய்ட் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளித்தலைமையாசிரியர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர் மங்கையற்கரசி வெகுவாக பாராட்டினர். இதேபோல் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.

The post மாநில டென்னிகாய்ட் போட்டியில் மானூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Manur State School ,Manur ,Tennycoid ,Mayiladudhara district ,Tamil Nadu ,Manur Government Secondary School ,Surajkosan Joy ,Sriniketh ,Manur Government School ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...