- சுனாரு ரிசார்ட்
- மூணாறு
- போலந்து
- விப்பாரா
- மாங்குளம் ஊராட்சி
- முனாரு, கேரளா
- அச்சுறுத்தல்
- சுனாரு
- ரிசார்ட்
- தின மலர்
மூணாறு: கேரள மாநிலம், மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விரிபாறை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு கடந்த பிப்.1ம் தேதி காலை போலந்து நாட்டில் இருந்து இமெயில் வந்துள்ளது. அதில், ரிசார்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சில மணி நேரங்களுக்குள் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து சென்ற மூணாறு துணை காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸ் பேபி தலைமையிலான ஒரு பெரிய குழுவும், இடுக்கியைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் குழுவும் நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி வரை ரிசார்ட்டில் சோதனை நடத்தினர், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணையில், போலந்து நாட்டில் இருந்து போலி முகவரி கொண்ட மின்னஞ்சல் ஐடியில் இருந்து இந்த செய்தி வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக மூணாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
The post மூணாறு ரிசார்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
