- JolarBetta
- ஜோலார்பேட்டை
- தேசிய வங்கி
- கொடியூர்
- ஜோலார்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம்
- பதபகல்
- ஏடிஎம்
- ஜோலார்பேட்டை
- தின மலர்
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று மாலை 3 மணியளவில் பணம் நிரப்புவதற்காக பாதுகாப்பு வாகனத்தில் ஊழியர்கள் வந்தனர். வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு பையில் ரூ.36 லட்சத்துடன் ஏடிஎம் மையத்துக்கு நுழைய முயன்றனர். அப்போது இவர்களை பின் தொடர்ந்து மொபட்டில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் முகத்தை துணியால் மூடியவாறு பணப்பையை பறித்துக்கொண்டு மொபட்டில் ஏறி தப்ப முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த பைக் மீது மொபெட் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பணப்பை சாலையில் விழுந்தது. உடனே வங்கி ஊழியர்கள் அந்த பணப்பையை மீட்டனர். மர்ம வாலிபர்கள் இருவரும் மொபட்டை போட்டுவிட்டு ஓடினர். அவ்வழியாக சென்றவர்கள் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. ஜோலார்பேட்டை போலீசார் அந்த மொபட்டை பறிமுதல் செய்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
The post ஜோலார்பேட்டையில் பட்டப்பகலில் துணிகரம் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த ரூ.36 லட்சம் கொள்ளை: பைக் விபத்தால் பணம் தப்பியது, தப்பி ஓடிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.
