×

இரட்டை கொலை வழக்கு குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் பாரதிபுரம் பகுதியில் கடந்த 2021ல் கஞ்சா வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் சிங்காநல்லூரை சேர்ந்த வசந்தகுமார் மற்றும் பாரதிபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய இரண்டு பேரை அடித்து கொலை செய்ததாக ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வந்தனர்.
ஹரிகிருஷ்ணன் தனது தாயாருடன் சிந்தாமணிபுதூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர், வீட்டில் சண்டை கோழிகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர். நேற்று அதிகாலை அவரது தாய் கண் விழித்து பார்த்த போது படுக்கையில் இருந்த ஹரிகிருஷ்ணனை காணவில்லை. வீடு முழுவதும் தேடி பார்த்தார். அப்போது சண்டை கோழிகள் வளர்க்கும் பகுதியில் உள்ள விட்டத்தில் அவர் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post இரட்டை கொலை வழக்கு குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sulur ,Harikrishnan ,Vasantha Kumar ,Singanallur ,Santosh Kumar ,Bharathipuram ,Sulur Bharathipuram ,Coimbatore district ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...