×

ஹோலி கிராஸ் பள்ளி ஆண்டுவிழா

சேலம், பிப்.4: சேலம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹோலி கிராஸ் இண்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் ஸ்டீபன் ஆனந்தராஜ், தொடக்கப்பள்ளி துணை முதல்வர் அருள் ஜீவன், பள்ளியின் நிர்வாகி ஏசுதாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர். சதீஷ்குமார் தலைமை விருந்தினராகவும், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். பிந்து சரவணன் கவுரவ விருந்தினராகவும், டாக்டர். துரைசாமி சிறப்பு விருந்தினராகவும், சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று பேசினர். பள்ளியின் முதல்வரும், தாளாளருமான சேசுராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அந்துவான் குணசீலன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post ஹோலி கிராஸ் பள்ளி ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Tags : Holy Cross ,Salem ,Holy Cross Matriculation Higher Secondary School ,Holy Cross International School ,Principal ,Stephen Anandaraj ,Deputy Principal ,Arul Jeevan ,School Administrator ,Yesudasan ,Holy Cross School ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்