×

குழந்தைகள் மையத்திற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு

திருவொற்றியூர், பிப்.4: புது வண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை முடிந்து, நேற்று காலை இந்த குழந்தைகள் மையத்தை, சமையல் பணியாளர் திறக்க வந்தபோது, சமையல் அறையில் 6 அடி நீள பாம்பு இருந்தது. இதை பார்த்து அலறி கூச்சலிட்டு வெளியே ஓடி வந்தார். தகவலறிந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 6 அடி நீள சாரப்பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இந்த மையத்தில் விட்டுச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post குழந்தைகள் மையத்திற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur ,A.E. Koil Street ,Pudu Washermanpet ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்