- ராமதாஸ்
- தமிழக நுகர்வோர் கொள்முதல் நிறுவனம்
- சென்னை
- பா. எம். க.
- ராம்தாஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கொள்முதல்
- காவிரி நீர்ப்பாசன மாவட்டங்கள்
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் வர்த்தகக் கழகம்
- தின மலர்
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மாநில அரசுகளின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் போது உழவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதால், அதை சிதைக்கும் வகையில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முயலக் கூடாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை என்றால், தமிழக அரசே நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமே நெல் கொள்முதல் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
